கடவுள்கிட்ட 3 வயசு பையன் சொல்லிட்டான் போல..

by Chandru, Mar 26, 2020, 13:21 PM IST


லட்சுமி ராமகிருஷ்ணனின் அட்வைஸ்..

கதகளி, அம்மணி, இரவுக்கு ஆயிரம் கண்கள், திமிறு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் அம்மா வேடங்களில் நடிப்பதுடன் ஆரோகனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் படங்களை இயக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.கொரோனா உள்ளிட்ட உலகில் நடக்கும் பல்வேறு கெட்ட நிகழ்வுகள் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சிரியாவில் 3 வயது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையால் இறக்கும் முன்,' இருங்க உங்க எல்லாரைப் பத்தியும் கடவுள்கிட்ட சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு இறந்தான். அந்த புகைப்படம் ஒன்று எனக்கு பார்வர்ட் ஆகிவந்தபோது மனம் உடைந்து போனது. இந்த சம்பவம் உண்மையா? பொய்யா என்று எனக்கு தெரியாது.ஆனால் பூமியை அவமதிப்பதும், குழந்கைகளின் மீது அக்கறை எடுத்துக்கொள்ளாததும் அதன் எதிர்வினைகளை மக்கள் அனுபவிப்பதை பார்க்கும்போது ஒருவேளை அந்த சிறுவன் எல்லாவற்றையும் கடவுளிடம் சொல்லியிருப்பான் போலிருக்கிறது. வேற்றுமைகளை விட்டுத் தள்ளுங்கள். இழப்புகளை சரி செய்யப்பாருங்கள். அன்பால் இந்த உலகத்தை சிறந்த வாழ்விடமாக மாற்றுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.


Leave a reply