விவாகரத்து நட்சத்திர ஜோடியை சேர்த்து வைத்த கொரேனா..

by Chandru, Mar 26, 2020, 13:32 PM IST

ஒரே வீட்டில் குழந்தைகளுடன் குடியேறினார்..

உயிர்கொல்லி நோயாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பயம் பிரிந்து கிடப்பவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கிறது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவி சுசேன்கான் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். ஹிருத்திக்குடன் அவர்களது 2 மகன்கள் உள்ளனர். தனித்தனியாக வாழ்த்து வந்த ஹிருத்திக் அவரது மனைவி சுனேன் தற்போது இணைந்திருக்கின்றனர்.

இதுநாள் வரை தனிமையில் இருந்த சுசேன் கான் கொரேனா பீதி நிலவும் நிலையில் மகன்களை தனிமையாக விட மனமில்லாமல் அவர்களுடன் வந்து தங்கிவிட்டார். அதற்காக நன்றி தெரிவித்திருக்கும் ஹிருத்திக் வீட்டுக்கு திரும்பி வந்த மாஜி மனைவியுடன் செல்பி எடுத்து பகிர்ந்திருக் கிறார்.


Leave a reply