புலி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவரும், மற்றும் பட இயக்குநருமான பி. டி. செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வரும் ஏழைகளுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். குறிப்பாக மொழி பேசத் தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் , தெலுங்கு மொழி பேசும் கட்டிடத் தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி மிகப் பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்.
நெல்லை மாவட்டத்தில் ரஜகை ஏழை எளிய மக்களுக்கும் 100 மூட்டை அரிசிகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது ....தற்போது வடபழனியில் சாலிகிராமம் சுற்றுவட்டார ஓட்டுநர்களுக்கு 150 மூட்டை அரசி மற்றும் உதவிப் பொருட்களையும், மளிகை சாமான்களையும் வழங்கினார்.இந்த நற்பணியில் திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார் .அவர் பேசியதாவது :
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு அழகாக சமூக இடைவெளியைக்
கடைப்பிடித்து, அதிலும் அன்றாடம் கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டும் கூலி தொழிலாளர்களை அவர்களுக்கு இன்று உதவி செய்தது ஒரு புண்ணியமான விஷயமாகும். கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெளியில் செல்ல வேண்டாம் என்று வீட்டில் கூடச் சொன்னார்கள். ஆனால் இந்த நல்ல விஷயத்தைச் செய்யும் தருணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று துணிச்சலாக வந்தேன். இப்படி ஒரு உதவியை முன்னெடுத்து நடத்தும் கலப்பை மக்கள் இயக்கத்தினருக்கு மனதார பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் 'என்றார்.
பின்னர் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பி டி செல்வக்குமார்,
'தமிழகத்தில் கொடுமையான வைரஸ் பரவிய பிறகும் சில குறிப்பிட்ட ஊர்களில் தெய்வத்திற்குச் சமமான மருத்துவர்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னவர்கள் உண்மையிலே மனிதநேய மற்ற அரக்கர்கள் , அவர் களைதான் முதலில் இந்த அரசு ஒதுக்க வேண்டும். இன்று இந்த ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டு பிடித்து உதவி செய்தது கூட காரணம் என்னவென்றால் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். ஏழை ஆட்டோ ஓட்டுநர்கள் தினமும் ஆட்டோவுக்கு டியூ கட்டியே வாழ்கிறார்கள். இதைப் பார்த்து இவர்களுக்கு இன்னும் நிறையப் பேர் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதனைச் செய்தோம்'என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட பணிகளுக்கு டபுள் மீனிங் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் உதவியாக இருந்தார். மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் நந்த குமார், செந்தில் பிரபு, ராஜ்குமார் கலந்து கொண்டார்கள்.