மாஸ்டரில் விஜய் இரட்டை வேடம்? சர்ப்ரைஸ் நிஜமாகுமா?

Vijays dual roles kept secret by Master team?

by Chandru, Apr 29, 2020, 13:56 PM IST

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகவிருந்தது கொரோனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது ஏற்கெனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மற்றொரு சர்ப்ரைஸாக விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகிறது. இதுகுறித்து பட தரப்பில் கேட்டால், படம் வந்தால் பாருங்கள் என்று சஸ்பென்சாகவே பதில் தருகின்றனர்.பேராசிரியையாக ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பது ஏற்கெனவே குட்டி ஸ்டோரி பாடல் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் சிறைச்சாலை சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதுதான் இரட்டை வேட சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

You'r reading மாஸ்டரில் விஜய் இரட்டை வேடம்? சர்ப்ரைஸ் நிஜமாகுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை