கொரோனா ஊரடங்கு தளர்வு பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆந்திராவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து பலர் பார்டர் தாண்டி சென்று மதுக்கடையில் குவிந்தனர். சரக்கும் கொஞ்ச நேரத்தில் விற்று தேர்ந்தது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகின. நாளை முதல் தமிழ்நாட்டிலும் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.இயக்குனர் வெங்கட் பிரபு தனது பாணியில் ஒரு டிவிட்டர் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறும்போது. வீடியோக்களை பார்க்கும்போது எல்லா மதுக்கடைகளும்
கொரோனாவை பரப்ப தொடங்கியிருக்கிறது தெரிகிறது. பலர் தங்களிடம் ஸ்டாக் இருக்கிறது பாவம் ஏழைகள் என்ன செய்வார்கள் என்று கேட்கின்றனர்.என்னிடமே தீர்ந்து பல நாள் ஆச்சு. பாதுகாப்பு முக்கியம். பாதுகாப்பாக இருங்கள் எனக் காமெடியாக ஒரு கருத்தையும் உள்ளடக்கி டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார் வெங்கட்பிரபு.