கொரோனா பாதிப்பால் சம்பளம் குறைத்த ஹீரோ.. தலா ரூ 1 கோடி அளவில் 3 படத்துக்கு குறைப்பு..

Vijay Antonys huge gesture for producers amidst lockdown

by Chandru, May 5, 2020, 13:53 PM IST

இசை அமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் போன்ற பல படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள், செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். கொரோனா வைரஸ் லாக்டவுனால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பளர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து தனது தயாரிப்பளர்களுக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி தற்போது தான் நடிக்கும் 3 படங்களிலும் தனது சம்பளத்தை தலா 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக கூறியிருக்கிறார். அதாவது தலா ஒரு படத்துக்கு சுமார் ரூ. 1 கோடி வரை குறைத்துக்கொள்கிறாராம்.விஜய் ஆண்டனியின் இந்த பெருந்தன்மையான போக்கைத் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி,சிவா வரவேற்றிருக்கிறார்.

You'r reading கொரோனா பாதிப்பால் சம்பளம் குறைத்த ஹீரோ.. தலா ரூ 1 கோடி அளவில் 3 படத்துக்கு குறைப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை