பாவனா பெயரில் போலி பேஸ்புக் நடமாட்டம்.. உஷார் செய்த நடிகை..

Actress Bhavna: I am not on Facebook

by Chandru, May 9, 2020, 12:36 PM IST

சித்திரம்பேசுதடி பட ஹீரோயின் பாவனா தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார். 2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் கன்னட படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.


பாவனா அதிக படங்களில் நடிக்கா விட்டாலும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் தன் பெயரில் போலிக் கணக்கு நடமாடுவதாகக் கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது பற்றி குறிப்பிட்டிருக்கும் பாவனா,பேஸ்புக்கில் எனக்குக் கணக்கு கிடையாது. ஆனால் போலியாக என் பெயரில் அதில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் யாராவது இணைந்திருந்தால் அதிலிருந்து தயவு செய்து விலகுங்கள். அது பற்றி எனக்குத் தெரிவிக்கவும் எனக் கூறியிருக்கிறார்.

You'r reading பாவனா பெயரில் போலி பேஸ்புக் நடமாட்டம்.. உஷார் செய்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை