டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி கோவில்களை அவமதித்தாக சிலர் அவரை இணைய தளத்தில் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள் பற்றி அவரது ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், 'கோவில் மற்றும் சடங்குகளை புனிதமாகக் கருதுபவர்களுக்கும் அதைப் பற்றி விமர்சிக்கும்போது நிச்சயமாக மனம் புண்படும், வேறு எந்த மதத்தின் மத நடை முறைகளையும் யாரும் கேலி செய்யத் துணிவதில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் ஆனால் ஒருவரைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் அவர் அதுபோல் எப்போது சொன்னார் என்பதை யோசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.