மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன். அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் நின்றிருக்கின்றன. சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனதுபடத்தில் விக்ரமை நடிக்க வைக்கப் பேசி வருகிறாராம். ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் புதிய ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார். அதில் தான் விக்ரமை நடிக்க வைக்கப் பேசி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இது விக்ரம் நடிக்கும் 60வது படமாக இருக்கும்.