டைரக்டர் மணிரத்னம் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.இதுபற்றி மணிரத்னம் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நின்றிருக்கிறது. பொன்னியின் செல்வன் 10ம் நூற்றாண்டு படம். இதில் காட்சிகளுக்கு நிறைய ஜூனியர் நடிகர்கள் நடிக்கவேண்டி இருக்கும். இதனால் அவ்வளவு கூட்டத்தை வைத்துப் படப் பிடிப்பு நடத்துவது இந்த காலகட்டத்தில் சிரமம். ஆனாலும் தொழில் நுட்ப வளர்ச்சியில் அதனைச் செய்ய முடியும் என்றார்.
தற்போது நிலவும் சூழலில் படத்தில் நடிக்கும் பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது மணிரத்னத்தின் எதிர் பார்ப்பாக உள்ளதாம். இதில் விக்ரம். ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சம்பள விஷயத்தில் இவர்கள் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது சஸ்பென்ஸாக உள்ளது.