சினிமா துறையினருக்கு 1000 வீடுகள்... முதல்வர் இன்று அடிக்கல்..

tamalnadu cm lays foundation stone for 1000 cine employees home

by Chandru, Jun 2, 2020, 13:15 PM IST

பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இன்று மாலை அளித்துள்ள பேட்டி வருமாறு:இன்று பையனரில் உள்ள தமிழக அரசு வழங்கிய இடத்தில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உறுப்பினர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கிய நிலத்தில் ஆயிரம் குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.

கொரோனா லாக் டவுன் முன்பு ஏறக்குறைய மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்பே பிப்ரவரி மாதம் இந்த குடியிருப்பைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்திருந்தோம். கொரோனவால் மூன்று நான்கு மாதங்களாகத் தள்ளி வைக்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி இன்று ஜூன் 16 2020 முதல் நிகழ்ச்சியாகத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, எங்கள் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் அம்மா படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்காக இரண்டாம் தவணை நிதியாக ரூபாய் 50 லட்சம் காசோலையாக முதல்வர் வழங்கினார்.

தினசரி வேலை செய்து தினசரி ஊதியம் பெறுகின்ற தினக்கூலி பிரிவில் இருக்கின்ற பொருளாதாரத்தில் நலிந்த ஏறக்குறைய ஐந்தாயிரம் தொழிலாளர்களுக்கு முன் பணம் கட்டுவது, கிடைக்கின்ற குறைந்த சம்பளத்தில் மாதத்தவணை கட்டுவதோ இயலாத காரியமாகும் எங்களுடைய சிரமத்தை 26.8. 2018 அன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் திறப்பு விழாவில் தங்களிடம் நேரடியாகத் தெரிவித்தபோது துணை முதலமைச்சரிடம் இது சம்பந்தமாகப் பேசி தொழிலாளர்களுக்கு உதவும்படி ஆலோசனை வழங்கினார் அவர்களின் ஆலோசனையின்படி நாங்கள் இரண்டு முறை உதவி துணை முதல்வரைச் சந்தித்துப் பேசினோம். துணை முதல்வரும் செய்தித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் விவாதித்து தற்போது பையனூரில் அரசு வழங்கியுள்ள இடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு நிலத்தில் குறைந்த வருவாயுள்ள தொழிலாளர்களுக்கு 2000 வீடுகள் இலவசமாகக் கட்டித்தர வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.

இன்று காலை அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்பு முதல்வரைச் சந்தித்து இந்த கோரிக்கை பற்றி விவாதித்தபோது நாளை மறுநாள் துணை முதல்வரைச் சந்தித்து இதற்கான விஷயங்களை விவாதிக்கு மாறு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தெரிவிக்க எங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் தற்போது சின்னதிரை படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னதிரை தயாரிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்தபோது படப்பிடிப்புகள் எவ்வாறு தொடங்குவது, எந்தவிதமான பாதுகாப்புடன் தொடங்குவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்தையும் விவாதித்த பின்னர் மேலும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் பெப்சியும் உறுப்பினர்... உறுப்பினர் என்ற அடிப்படையில் பணி புரிவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது அதாவது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் அனைத்து படப்பிடிப்புகளும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (ஸ்டெப்ஸ்) பரிந்துரை கடிதம் வழங்கிய பின்னர் அந்த தயாரிப்பாளருக்கு சம்மேளனம் தொழில் ஒத்துழைப்பு வழங்குவது எனவும் சம்மேளனத்தின் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும் அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதற்காக அரசு அளித்த விண்ணப்பங்களில் கூறப் பட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் கோரிக்கையாக தற்போது கொரோனா வைரசால் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பயம் உள்ளதால் இன்சூரன்ஸ் பெற்றுத் தரும்படி ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது அனைத்து தொழிலாளர்களும் வேண்டுகோளையும் ஏற்று சேனல்களில் covid-19 இன்சூரன்ஸ் செய்து தருவதாகத் தெரிவித்து தொலைக்காட்சி நிறுவனங் கள் ஒப்புக்கொண்டுள்ளன. எங்கள் கோரிக்கையை ஏற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்
பேட்டியின்போது பெப்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பையனுயூரில் மொத்தம், 9000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

You'r reading சினிமா துறையினருக்கு 1000 வீடுகள்... முதல்வர் இன்று அடிக்கல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை