அடுக்குமாடி குடியிருப்பில் பிந்து மாதவி 14 நாட்கள் தனிமை.. கொரோனா பாதித்த நபரால் அடைபட்டார்..

Actress Bindhu Madavi Quarantined At Her Apartment

by Chandru, Jun 2, 2020, 13:19 PM IST

கிருஷ்ணா ஜோடியாகக் கழுகு படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. பசங்க 2, ஜாக்ஸன் துரை, பக்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்னையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கொரோனா பாதித்த ஒருவரால் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி பிந்து மாதவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது.எங்களது குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் வந்தது. இதையடுத்து குடியிருப்பில் உள்ள அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பின் கதவைப் பூட்டி 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர் என்றார்.கொரோனா தடைகாலம் முடிந்ததும் மாயன், யாருக்கும் அஞ்ஜேல் ஆகிய இரண்டு படங்களில் பிந்துமாதவி நடிக்க உள்ளார்.

You'r reading அடுக்குமாடி குடியிருப்பில் பிந்து மாதவி 14 நாட்கள் தனிமை.. கொரோனா பாதித்த நபரால் அடைபட்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை