இளம் இசை அமைப்பாளர் கொரோனா பாதிப்பறிந்து மாரடைப்பில் மரணம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்..

by Chandru, Jun 2, 2020, 13:22 PM IST

ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

சல்மான்கான் நடித்த பியார் கியா டு டர்னா கியா படம் மூலம் அறிமுகமானவர்கள் இசை அமைப்பாளர்கள் வாஜித் கான், சாஜித் கான். இவர்கள் சல்மான் கான் நடித்து வேறு பல படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். இந்நிலையில் வாஜித்கான் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது தெரிந்தது. இதனால் வேதனை அடைந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. இளம் வயதிலேயே அவர் மரணம் அடைந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.அவரது மறைவுக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். நடிகர் சல்மான் கான். தயாரிப்பாளர் போனிகபூர் உருக்கமான இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.


More Cinema News