சிம்ரன் தோற்ற சாயலில் தமிழில் நடிக்க வந்தவர் நிலா. இவரது நிஜப் பெயர் மீரா சோப்ரா. அன்பே ஆருயிரே, மருதமலை, லீ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
'உங்களுக்கு பிடித்த நடிகர் ஜூனியர் என் டி ஆரா? மகேஷ்பாபுவா' என்று ஒரு ரசிகர் கேட்க, 'எனக்கு ஜூனியர் என் டி ஆரைவிட மகேஷ்பாபு வைத்தான் பிடிக்கும் என்று நிலா சொன்னார்.
இது ஜூனியர் என் டி ஆர் ரசிகர்களைக் கோபப்படுத்தியது. நிலாவைச் சகட்டு மேனிக்கு டோஸ் விடத் தொடங்கினர். அதிர்ச்சி அடைந்த நிலா ஜூனியர் என் டி ஆர் இடம் டிவிட்டரில் புகார் செய்திருக்கிறார். 'ரசிகர் கேள்விக்குத் தான் பதில் அளித்தேன். அதற்காக என்னையும் என் பெற்றோரையும் உங்கள் ரசிகர்கள் இப்படித் திட்டலாமா? என புலம்பித் தள்ளியிருக்கிறார். நிலா.