சில வருடங்களுக்கு முன்பு விஷால், கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை பிரபுதேவா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தில் நடிகர் சங்கத்துக்குக் குறிப்பிட்ட தொகை அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு அது கிடப்பில் போடப்பட்டது.
திடீரென்று இரண்டு மூன்று நாட்களாக கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை பிரபுதேவா இயக்கவிருப்பதாகவும் அதில் நயன்தாரா நடிக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது.
இது குறித்து படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறும்போது. நீண்ட நாட்களுக்கு முன்பே கருப்பு ராஜா வெள்ளை ராஜா படம் டிராப் ஆகிவிட்டது. மீண்டும் தயாரிக்கும் எண்ணம் இல்லைஎன்றார். இதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று தெளிவாகி இருக்கிறது.