ஜெ.அன்பழகன் மரணம்: நடிகர் ராகவா லாரன்ஸ் அனுதாபம்..

by Chandru, Jun 10, 2020, 15:02 PM IST

திமுக எம் எல் ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் காண என் அறக்கட்டளை குழந்தைகளுடன் நான் சென்றபோது அங்கிருந்த ஜெ. அன்பழகன் அவர்கள் எனது சமூக சேவையைப் பாராட்டினார், அவரது பாராட்டை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவரை இழந்துவாடும் திமுகவினருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பழகன் ஆன்மா சாந்தி அடைய என் அறக்கட்டளை குழந்தைகளுடன் நானும் இணைந்து பிரார்த்தனை செய்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


More Cinema News