ஜெ.அன்பழகன் எம் எல் ஏ : மறைவு.. டி.ராஜேந்தர் இரங்கல்..

by Chandru, Jun 10, 2020, 14:56 PM IST

திமுக எம் எல் ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு விநியோகஸ்தர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இன்று இயற்கை எய்தியதாக வந்த செய்தி எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை