பால் குளியல் குளித்து ரசிகர்களை கிரங்கடித்த நடிகை.. ஒரு நாள் கிளியோபாட்ரா..

உலக அழகி நடிகை என்றதும் ஐஸ்வர்யா ராயைத்தான் பலரும் நினைப்பார்கள். அவரைப்போல் மேலும் ஒன்றிரண்டு நடிகைகள் உலக அழகி பட்டம் வென்றிருக்கின்றனர். 2015 ம் ஆண்டு உலக அழகி (திவா) பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுட்லா. இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். பட்டம் வெல்வதற்கு முன்பே 2013 ம் ஆண்டு சிங் சாப் தெ கிரேட் என்ற படத்தில் நடித்தார். பின்னர் பட்டம் வென்ற பிறகு மிஸ்டர் ஐராவதா, பஹாக் ஜான்னி, சனம்ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது அது வல்ல சங்கதி. ஊர்வசிக்கு திடீரென்று உலக அழகி கிளியோ பாட்ராவின் ஞாபகம் வந்து விட ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாளாவது அவரை போல் வாழ எண்ணினார். கிளியோ பாட்ராவின் அழகுக்குக் காரணம் அவரது பால் குளியல்தான் எங்கோ படித்திருக்கிறாராம் ஊர்வசி. தானும் அதுபோல் குளியல் போட நினைத்தவர் பாத் டப் நிறையப் பால் ஊற்றி நிரப்பினார். அதில் வாசனை பொருட்களைக் கலந்தார். அந்த பாத்ரூமே பால் வாசனையாலும், வாசனைத் திரவிய நெடியாலும் மூக்கை துளைத்தது. அந்த மயக்கத்தில் பாத் டப்பில் ஒய்யாரமாக குளியல் போட்டார் ஊர்வசி ரவுட்லா. பால் மேனியின் பால் குளியல் படத்தைத் தனது இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எனது இந்த குளியல் படத்துக்கு ரசிகர்கள் கவிதை எழுதட்டும் என்று அவர்களிம் கற்பனை குதிரைகளைத் தட்டி கிரங்கடித்திருக்கிறார்.