படத்தயாரிப்பாளர் டி,ஜி. தியாகராஜன் சிஐஐ பணிக்குழு தலைவராக நியமனம்..

by Chandru, Jun 15, 2020, 15:58 PM IST

திரைப்படத் தயாரிப்பாளர்சத்யஜோதி பிலிம்ஸ் டி,ஜி.தியாகராஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தொழில் துறையின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் அமைப்பே CII ஆகும்.


இதுகுறித்து அவர் கூறும்போது.“இந்த ஆச்சரியமான செய்தி திடீரென்று வந்துள்ளது; CII எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். தற்பொழுது பிற தொழில்துறைகளைப் போலவே திரைத்துறையும் ஒரு மாபெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் இப்படியான புதிய பொறுப்பை நான் பெற்றுள்ளதால் எனக்கு இன்னும் சவாலான பலவேறு பல பணிகள் காத்துள்ளன; அவற்றைச் செய்துமுடிக்கும் நன்னாளை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் பல ஆண்டுகள் தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவனாகவும் எனது நீண்ட பயணம் எனக்குத் தந்துள்ள பயனுள்ள அனுபவத்தினால் எனது இப்புதிய பணியில் நான் வெற்றியை அடைவேன் என்று நம்புகிறேன். கௌரவமிக்க இப்பதவிக்கு என்னை நியமித்த CII உறுப்பினர்களுக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

125 வருட காலப் பாரம்பரியமிக்க CII-இன் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும்; என்னால் இயன்ற வரை இப்பதவிக்கு மேலும் கௌரவத்தைச் சேர்க்க நான் முயற்சி செய்வேன் என்றார் டிஜி.தியாகராஜன். இதுவரை 5000-க்கு மேற்பட்ட சின்னதிரை அத்தியாய தொடர்களையும்40 திரைப்படங்களையும் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தயாரித்துள்ளார் தியாகராஜன் சத்யஜோதிபிலிம்ஸ் பட நிறுவனத்தைத் தொடங்கி சத்யா மூவீஸ் என்ற புகழ்பெற்ற படநிறுவனம்மூலம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்ஜீவி மற்றும் சிவாஜி கணேசன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ள பல்வேறு வெற்றிப் படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

இவரை வழிநடத்திய புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகிய இராம.வீரப்பன் இவரது மாமனார் தான். இவரது தந்தை வீனஸ் T. கோவிந்தராஜனும் ஹிந்தி உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள தேசிய விருது வென்ற திரைப்படத் தயாரிப்பாளராவார்.


Speed News

 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST
 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

  11,300 வென்டிலேட்டர்கள் சப்ளை

  கொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன. 

  இந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார். 

  Jul 4, 2020, 14:34 PM IST
 • சாத்தான்குளம் வழக்கில் 

  மேலும் 4 பேர் கைது

  சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.

  இந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  Jul 4, 2020, 14:30 PM IST
 • அமைச்சர் மனைவிக்கு கொரோனா..

  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

  ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  Jul 4, 2020, 14:26 PM IST
 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST