பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த 14 ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் அடுத்த ஆண்டு தடபுடலாகத் தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
சுஷாந்த்தின் தந்தை சமீபத்தில் ஒரு உரையாடலின் போது,சுஷாந்த் நடித்து முடித்துள்ள படம் திரைக்கு வந்ததும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இது பற்றி என்னிடம் பேசியிருந்தார். இது தான் நாங்கள் இருவரும் கடைசியாக உரையாடியதாக நினைவிருக்கிறது. அவரது திருமணத்துக்காக மொத்த குடும்பமும் தயாராகி வந்தோம். அனைவரும் மும்பைக்குச் செல்லவும் எண்ணியிருந்தோம் எனத் தெரிவித்திருக்கிறார்.
சுஷாந்த் யாரைத் திருமணம் செய்யவிருந்தார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. இதனால் சுஷாந்துக்கு திருமண விஷயத்தில் யாராவது பிரஷர் கொடுத்தார்களா அல்லது கேர்ள் ஃபிரண்ட், காதலி, மாஜி காதலி யாராவது அவரை மிரட்டினார்களா எனக் கேள்வி எழுந்திருக்கிறது. சுஷாந்தின் காதலி என்று தற்போது பேசப்படுபவர் ரியா சக்ரபோர்தி, மாஜி காதலியாக கூறப்படுபவர் அங்கிதா லெகண்டா ஆவார்கள். 2021ம் ஆண்டில் திருமணம் செய்வது என்ற கனவிலிருந்த சுஷாந்த்துக்கு அவரது தற்கொலை முடிவால் அது நிறைவேறாத ஆசையாக மாறியிருக்கிறது.