ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை மீது மீரா மிதுன் தாக்கு..

Meera Mitun Questions Kangana Ranaut qualification

by Chandru, Jun 30, 2020, 19:15 PM IST

நடிகை மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு. இம்முறை நடிகை கங்கனா ரனாவத்தை வம்புகிழுத்திருக்கிறார். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்குத் தான் ஆதரவு தருகிறார்கள். வெளி நடிகர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த மன அழுத்தம் தான் சுஷாந்த் சிங் தற்கொலைக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.

கங்கனாவின் இந்த கருத்து பற்றி விமர்சித்திருக்கிறார் நடிகை மீரா மிதுன். சுஷாந்த் உயிருடன் இருந்தபோதே வாரிசுகள் பற்றிய கருத்தை கங்கனா சொல்லியிருக்க வேண்டும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று கூறுவது சுஷாந்த்தின் மரணத்தை வைத்து அவர் விளம்பரம் தேடிக்கொள்வதாகவே தோன்றுகிறது. இப்படி ஒரு துணிச்சல் இல்லாதவர் துணிச்சலான மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது பொருத்தமில்லாதது ஆகும்.

அது வெட்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார் மீரா மிதுன்.
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.கங்கனா ரனாவத் தற்போது தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை