தெலுங்கு பிக்பாஸில் பிரபல தமிழ் நடிகை..

Tamil Actress in Telugu Bigboss

by Chandru, Jul 2, 2020, 10:28 AM IST

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இம்முறை பிக்பாஸ் 4வது சீசன் நடக்கவிருக்கிறது. கடந்த 3 முறை நடந்த நிகழ்ச்சிகளை ஜூனியர் என் டி ஆர், நானி மற்றும் ரம்யா கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினர். 4வது சீசன் நடத்த நடிகை சமந்தாவிடம் கேட்டு அணுகியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் போட்டியில் பங்கேற்பது பற்றி பிரபலங்களிடம் பேசி வருகின்றனர்.

தமிழில் சேவல், துரோகி, ஆம்பள ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் பூனம் பஜ்வா பிக்பாஸ் தெலுங்கு 4வது சீசனில் பங்கேற்க உள்ளார். மேலும் அம்ச நந்தினி, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

You'r reading தெலுங்கு பிக்பாஸில் பிரபல தமிழ் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை