கொரோனா ஊரடங்கால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சேன்டல் வுட் என இந்தி, தமிழ், தெலுங்கு, மலை யாளம் மற்றும் கன்னடம் என எந்த மொழிப் படங்களின் படப்பிடிப்பும் நடக்கவில்லை. இதனால் சினிமா துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் முடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்நிலையில் மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் தங்களது சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும், புதிய சினிமா ஷூட்டிங் எதுவும் இப்போதைக்கு தொடங்கப்படமாட்டாது என மலையாள பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கு நடிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களிடம் கலந்தாலோசிக்காமல் சமபளம் குறைக்க முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது என அறிவித்தனர்.
நேற்று கேரள மாநிலம் கொச்சியில் நடிகர் சங்க நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது. பொதுச்செயாலாளர் பாபு, துணை தலைவர் முகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் நடிகைகள் சம்பளம் 50 சதவீதம் குறைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: ரஜினி ஜோடி நடிகை சுமலதா எம்பிக்கு கொரோனா உறுதி
நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டாலும் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் யாரும் இதுவரை சம்பளம் குறைத்துக்கொள்வதாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.