மனோபாலா இயக்கும் நன்னயம் குறும் படத்தில் உதயா, அம்மு..

பிரபல இயக்குநரும்,நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ், இணையச் சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் ட்ரெண்ட் லவுட் நிறுவனத்துடன் இணைந்து நன்னயம் எனும் ஒரு சிறந்த குறும்படத்தைத் தயாரித்து உள்ளது. நன்னயம் எனும் இக்குறும்படம், விஷன் டைம் யூ ட்யூப் சேனலில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. குறும் படத்தின் டீசரை ஜூலை 6 அன்று படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
பிரபல திரைப்பட நடிகர்களான உதயா மற்றும் அம்மு இக்குறும்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, இக்குறும்படத்தில் ஜெயப் பிரகாஷ், சத்யப்ரியா, மற்றும் காமேஸ்வரன் போன்ற பல திரைப்பட கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நெஞ்சைத் தொடும் இக்கதை ஒரு பெண்ணை பற்றியது. சாதி சம்பிரதாயங்களில் அதி தீவிர நம்பிக்கை உடைய ஒரு தந்தைக்கும், சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது.
குறும்படத்தைப் பற்றி மேலும் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இது உலகம் கொரோனாவால் பாதிக்கப் பட்டு அவதிப்படும் பொழுது நடக்கும் கதை யாக திகழ்கிறது. அதாவது, இந்த கதை, இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை.
மனதை வருடக் கூடிய இந்த நல்ல கதை, அதன் பார்வையாளர்களின் மனதில் பல முக்கிய கேள்விகளை எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ட்ரெண்ட் லவுட் தலைமை நிர்வாக அதிகாரி சிதம்பரம் இக்குறும்படத்தைப் பற்றிக் கூறுகையில்,"பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய மனோபாலா இக்குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். திறமையான இயக்குநரும் நடிகருமான திரு. மனோபாலா உடன் இணைந்து இக்குறும்படத்தைத் தயாரிப்பதில் நாங்கள் பெருமிதமும், பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். இக்குறும்படம் எல்லா தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். இன்னும் பல அர்த்தமுள்ள நல்ல படங்களை வருங்காலத்திலும் தயாரிப்போம் என்று நம்புகிறேன்." என்றார்.
குறும்படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் அஜீஷ் இசையமைக்க, கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்புப் பணிகளை உமாபதி திறம்படச்செய்திருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் நன்னயம் குறும்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds