முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் சாம்பார், முருங்கை அவியல், முருங்கை பொரியல், முருங்கை கீரை என முருங்கை மரத்தையே வெட்டி சாய்த்து அந்த விஷயத்துக்கு இது நல்ல வேலை செய்யும் என்று அட்வைஸ் தந்தவர் கே.பாக்யராஜ். அவரது மகன் இப்போது முருங்கை சிப்ஸுடன் வருகிறார்.சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் புதிய படத்துக்கு முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாகிறது. ஸ்ரீஜர் டைரக்டு செய்கிறார்.
இதுவும் பெட்ரூம் சமாச்சாரம் தான். முதலிரவில் நடக்கும் சில பாரம்பரிய விஷயங்களை உள்ளடக்கி இக்கதை விரசமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கிறது.இதில் சாந்தனுக்கு ஜோடியாக அதுல்யா நடிக்கிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளையொட்டி பட நிறுவனம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.