ரஜினி, கமல், விஜய், அஜீத் படம் 2021லாவது வெளியாகுமா? விஸ்வரூபம் நடிகர் அதிர்ச்சி தகவல்

by Chandru, Jul 18, 2020, 10:30 AM IST

நான் எம்ஜிஆரைப் பார்த்தேன், அவர் எவ்ளோ கலர் தெரியுமா? இது 70களுக்கு முன் பிறந்தவர்களின் பிரமிப்பு. அவர் படம் ரீலீஸாகிறதென்றால் பக்கத்துக் கிராமத்திலிருந்து வில்லு வண்டி கட்டிக் கொண்டு குடும்பமாகப் படம் பார்க்க வந்துவிடுவார்கள். அவர் பக்கத்து ஊருக்கு வருகிறாரென்றால் மணிக்கணக்கில் இன்னும் சொல்லப்போனால் நாள் கணக்கில் அவரை பார்க்க மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். இது சினிமா எம்ஜிஆருக்கு வழங்கிய அந்தஸ்து. இது ஒன்றும் அவருக்குச் சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை . ஒரு துணை பாத்திரத்தில் நடித்து பின்னர் கலைஞருடன் நட்பு ஏற்பட்டு ஹீரோவாக நடித்து அரசியல் கட்சியில் சேர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

நடிகர் திலகம் சிவாஜி பராசக்தி என்ற ஒரே படத்தில் ஹீரோவாக உயர்ந்தார். அதற்கு முன் இருந்த காலங்கள் அதாவது தியாகராய பாகவதர். பி.யூ.சின்னப்பா காலங்களில் அவர்கள் தங்களை சினிமா என்ற எல்லைக்குள் மட்டுமே நிறுத்திக் கொண்டனர். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரண்டு துருவங்கள் சினிமாவையும் தாண்டி அரசியல் களத்தில் இறங்கினார்கள் . இவர்களில் எம்ஜிஆர் அரசியலில் சரித்திரம் படைத்தார். மக்களின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலையும் பிடித்தார். எம்ஜிஆர், சிவாஜி அடியொற்றி சினிமாவுக்குள் வந்தவர்கள் அரசியலையும் குறி வைத்தே வந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சிக் கலைஞர் விஜய காந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.. தொடங்கி இன்றைக்குத் தளபதி விஜய் வரை அரசியலை மையமாகக் கொண்டு சுழல்கிறார்கள். விஜய் தவிர மற்றவர்கள் அரசியல் களத்துக்குள் புகுந்து விட்டார்கள்.தனிக் கட்சி தொடங்குவேன் எம்ஜிஆர் ஆட்சி அமைப்பேன் என்கிறார் ரஜினிகாந்த். அதற்கான தலைவர் பதவி முதல் பூத் ஏஜெண்டு வரையிலான நிர்வாக அமைக்களை ஏற்படுத்தி இருக்கிறார். பட்டன் தட்டினால் கட்சிக் கொடியை பறக்க விடுவதற்கான தயார் நிலையில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி அரசியல் பணியாற்றி வருகிறார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம், சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைப் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
ஒரு தலைவன் உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஒரு சகாப்தம் வேண்டும், ஆட்சி என்பது மக்களுக்கு நல்லது செய்வதாக இருக்க வேண்டும் என்கிறார் விஜய். தனது ரசிகர் மன்றத்தை எந்த நேரத்திலும் அரசியல் இயக்கமாக மாற்றும் அளவுக்கு மன்றங்களை இணைத்து விஜய் மக்கள் இயக்கம் ஆக உருவாக்கியிருக்கிறார்.

அரசியல் பற்றிப் பேசா விட்டாலும் தமிழ் நாட்டுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றினால் நல்லது என்ற ஒரு பெரிய பட்டியலையே தயாரித்து வைத்திருக்கிறார் அஜீத். அதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் காட்டியும் இருக்கிறார். தற்போதைக்கு தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் ஒன்றிரண்டு பெயரைத் தவிர மற்றவர்கள் டெல்லியின் ஆதரவில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு காற்றடித்தால் எங்கு பறப்பார்கள் என்று தெரியாத நிலையில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் சினிமா என்ற மீடியம் தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைவர்களை தேடும் தளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதை விதைத்துவிட்டுச் சென்றவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்றால் அது தவறல்ல. சூப்பர் ஸ்டார், உலகநாயகன், புரட்சிக் கலைஞர், புரட்சி திலகம், தளபதி, அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டங்களைத் தாங்கி இன்றைக்கு சினிமாவிலிருந்தும் மக்கள் தலைவர்கள் களம் இறங்கியும், எதிர் காலத்தில் களம் இறங்கவும் காத்திருக்கிறார்கள். இவர்களில் ஒன்றிரண்டு தலைவர்கள் கூட்டணி அமைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களாக தங்களை அடையாளம் காட்டியிருக்கின்றார்.
நான் தான் தலைவர் என்னால் ஆட்சி அமைக்க முடியும் என்ற அசட்டுத் துணிச்சலுடன் இருப்பவர்கள் இன்னும் அரசியல் களத்தில் நேடியாக இறங்கவில்லை.2021ம் ஆண்டு தேர்தல் தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத உள்ளது. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கும் ஸ்டார் அந்தஸ்து ஹீரோக்களின் இமேஜை முடக்கும் ஒரு திட்டம் மறைமுகமாக அரங்கேற்றப்படுவதாக பலரால் பேசப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் நடித்தவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர். அவர் சமீபத்தில் ஒரு மெசேஜ் பதிவிட்டார். அதுதான் ஸ்டார் அந்தஸ்தை கேள்விக் குறியாக்கும் நகர்வுகளை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.ஜூலை 14ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், Theatres are not going to open for atleast a year. So all hype around first weeks bussiness of 100+ crores is dead. So the theatrical Star System is dead.Stars will have to go to existing OTT platform or stream films themselves through their own apps. Technology is quite simple அதாவது சரியான மொழி மாற்றபடிஒரு வருடத்திற்கு தியேட்டர்கள் திறக்கப் போவதில்லை. எனவே முதல் வாரங்களில் 100+ கோடி பரபரப்பானது இறந்துவிட்டது. எனவே நாடக (சினிமா) நட்சத்திர அமைப்பு இறந்துவிட்டது.
நட்சத்திரங்கள் தங்களது சொந்த பயன்பாடுகளின் மூலம் ஏற்கனவே இருக்கும் OTT இயங்கு தளத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது படங்களை ஸ்ட்ரீம் செய்ய வேண்டும். தொழில்நுட்பம் மிகவும் எளிது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சேகர் கபூர் கூற்றுப் படி இன்னும் ஒரு வருடத்துக்கு தியேட்டர்கள் திறக்கப்படாது என்றால் ரஜினியின் அண்ணாத்த, கமலின் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான், விஜய்யின் மாஸ்டர், தளபதி 65, அஜீத்தின் வலிமை, சூர்யாவின் சூரரைப் போற்று. தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்களின் ரிலீஸ் கதி என்ன? தேர்தல் வரும் வரை சூப்பர் ஸ்டார்களின் வாய் அடைக்கும் திட்டமோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.இந்த படங்கள் எல்லாம் தியேட்டரில் வெளியாகாமல் ஒவ்வொருவரும் கைப்பேசியில் ஒடிடி தளத்தில் பார்க்கும் நிலை உருவானால் ஸ்டார் அந்தஸ்த்தை எப்படி நிரூபிக்க முடியும், ரசிகர்களை எப்படித் திரட்ட முடியும். கொரோனா என்ற வைரஸ் அரக்கனை கொண்டு மக்களை முடக்கி வீட்டுக்குள் அடைத்திருப்பது போல் ஸ்டார் அந்தஸ்த்தையும் செல்போன் சிம்மிற்குள் அடைக்கும் சதிதான் உருவாகிறதோ என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் கிடைக்கப் போகிறது.

தியேட்டர்கள் ஒரு வருடம் கழித்துத் திறக்கப்பட்டால் அதற்கு எவ்வளவு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொண்டாட்டம் இருக்குமா? கூடி நின்று விசில் அடித்து ஆட்டம் தான் போட முடியுமா? என்ற பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகின்றனர் சிலர்.
தமிழில் முடங்கியிருக்கும் படப்பிடிப்புகள் , மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்புகளுக்கு பிறகு தான் ஸ்டார் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள ஹீரோக்கள் மீண்டும் ஒரு யுகம் போராட வேண்டியிருக்குமா என்பதைத் தீர்மானிக்க முடியும்.அரசியலை ஆட்டிப் படைக்கும் ஸ்டார் அந்தஸ்த்தின் சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வருவதன் அறிகுறியா இது என்பதை ஸ்டார்கள் தான் முடிவு செய்ய வேண்டும் தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்புயூர் ராஜிடம் தியேட்டர் திறப்பு பற்றி கேட்டபோது,'இப்போதைக்கு தியேட்டர் திறப்பு இருக்காது' என்றார்.


Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News