நடிகர் தற்கொலையில் காதல் நடிகை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.

by Chandru, Jul 29, 2020, 12:11 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் என்று சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ரியா சக்ரபோர்த்தி தெலுங்கில் துனீகா துனீகா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேரே டாட் கி மாருதி, சோனாலி கேபில் போன்ற இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ரியா மீது பாட்னா போலீசில் சுஷாந்த் தந்தை அளித்துள்ள புகாரில் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: சுஷாந்த் நடிப்பை விட்டுவிட்டு கேரளாவில் உள்ள கூர்க்கிற்கு சென்று வாழ விரும்பினார். அதற்காக தன்னுடன் வருமாறு ரியாவை அழைத்திருக்கிறார். ஆனால் மும்பையில் இருந்து வர முடியாது என்று அவரிடம் ரியா கூறி இருக்கிறார்.சுஷாந்த் மும்பையில் தங்கி இருக்கமாட்டார் என்று எண்ணிய ரியா ​சுஷாந்தின் பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள், முக்கியமான ஆவணங்கள், லேப்டாப் மற்றும் மருத்துவ பதிவுகளையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தன்னுடய மொபைல் போனிலிருந்து சுஷாந்த் நம்பரை டெலிட் செய்திருக்கிறார். ரியாவிடம் எல்லா ஆவணங்கள் இருப்பதாகவும் தனக்கு பைத்தியம் பிடித்ததாகவும், யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் என்றும் ஊடகங்களுக்கு முன்பாக பேட்டி அளிக்க வேண்டும் என்று சுஷாந்த்தை மிரட்டியிருக்கிறார், இதனை சுஷாந்த் தனது சகோதரியிடம் கூறியிருக்கிறார்.

ரியாவைச் சந்திப்பதற்கு முன்பு, சுஷாந்த் எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை. ரியாவை சந்தித்த பிறகு, சுஷாந்த் ஏன் மனநலம் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். சுஷாந்த் மனநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டாலும் அது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சிகிச்சையின் போது சுஷாந்த்தை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் ரியா. அங்கு அவருக்கு அதிக அளவுக்கு (ஓவர் டோஸ்) மாத்திரை கொடுத்திருக்கிறார். மற்றவர்களிடம் சுஷாந்திற்கு டெங்கு ஜூரம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். சுஷாந்த்தை புதிய படங்கள் எதிலும் கையெழுத்திடவிடவில்லை. ஒவ்வொரு முறை படங்கள் வரும் போதெல்லாம் தன்னை (ரியா) அந்த படத்தில் ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாங்கித் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். சுஷாந்தின் நம்பிக்கையான மற்றும் பழைய ஊழியர்களை மாற்றிய ரியா அதற்குப் பதிலாக தனக்கு விசுவாசமான தெரிந்த நபர்களை சுஷாந்த்திடம் வேலைக்கு சேர்த்திருக்கிறார். இதன் முலம் சுஷாந்த்தின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.

குடும்பத்தினருடனும் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமான யாருடனும் சுஷாந்த் பேசக்கூடாது என்று ரியா தடுத்தார். மேலும் மொபைல் எண்ணை மாற்றும் படி செய்தார். பாட்னாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க சுஷாந்த்தை ரியா அனுமதிக்கவில்லை.2019 ம் ஆண்டில், சுஷாந்த் தனது வங்கிக் கணக்கில் ரூ .17 கோடி வைத்திருந்தார், ஆனால் சில மாதங்களில் ரூ .15 கோடி அவருடன் இணைக்கப்படாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. அந்த பணத்தில் எவ்வளவு பணம் ரியா மற்றும் அவரது கூட்டாளிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ரியா மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.


Leave a reply

Speed News

 • பெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது

   

  பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது. 

  இந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட  இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார். 

  Aug 14, 2020, 10:15 AM IST

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 

  Aug 10, 2020, 14:48 PM IST

 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST

 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST

 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST

More Cinema News