மாஸ்டர் பட ஹீரோயினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சந்திரமுகி 2 நிறுவனம். கதாநாயகியாக ஒப்பந்தமா?

by Chandru, Aug 5, 2020, 18:42 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் இப்படம் வெளியாக உள்ளது.மாளவிகா பிறந்ததினத்தையொட்டி மாஸ்டர் படக் குழு அவருக்காக ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டிருப்பதுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றது. அதேபோல் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் மாளவிகா மோகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.


அண்ணாத்தபடத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றனர். மாளவிகா நடிக்கவில்லை முன்னதாக சன்பிக்சர்ஸ் தயாரித்த பேட்ட படத்தில் சசிகுமார்க்கு ஜோடியாக மாளவிகா நடித்திருந்தார். அடுத்து இந்நிறுவனம் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2ம் பாகம் தயாரிக்கிறது. பி.வாசு இயக்குகிறார், இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி நிறையத் தகவல்கள் வெளியாகி வருகின்றன ஜோதிகா, சிம்ரன். கியாரா அத்வானி ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அந்த பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் யாரும் சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். தற்போது மாளவிகாவுக்கு சன் பிக்சர்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதால் ஒருவேளை அவர் சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்க உள்ளாரா என்று நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை