சினிமா பாணியில் வேலைக்காரரை வைத்து ஹீரோவை வேவு பார்த்த நடிகை.. போன் பேசிய விவரம் அம்பலம்..

Advertisement

பெரிய இடங்களில் வேவு பார்ப்பதற்கு தனக்கு நம்பிக்கையான ஆளை அந்த இடத்தில் வேலைக்குச் சேர்த்து வேவு பார்ப்பது என்பது கறுப்பு வெள்ளை காலங்களிருந்து சினிமாவில் கையாளும் முறை. அது நிஜத்திலும் நடக்கிறது. தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகர் சுஷாந்த்தை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி சினிமா பாணியில் வேவு பார்த்தது அம்பலமாகி உள்ளது. சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட வழக்கு மும்பை போலீஸ் பதிவு செய்து விசாரிக்கிறது. சுமார் 40 பேர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே. கே. சிங் பாட்னா போலீசில் நடிகை ரியா மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி புகார் அளித்தார்.

சுஷாந்த் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 15 கோடி காணாமல் போனது. சுஷாந்த் வீட்டில் பழைய வேலை ஆட்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமான வேலையாட்களை நியமித்தார். சுஷாந்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டினார் என 10க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் அளித்திருந்தார். இந்த வழக்கை மும்பை போலீஸுக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் டில் ரியா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் தற்போது வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சுஷாந்த் தந்தையின் புகாரை உறுதிப்படுத்தும் வகையில் ரியா சுஷாந்த்திடம் போனில் பேசியதை விட அவரது வீட்டு வேலைக்காரரிடம் அதிகமாகப் பேசியது அம்பலமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் ரியா யாரிடம் செல்போனில் பேசி இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது.

சுஷாந்திடம் 145 முறை பேசியிருக்கும் ரியா அவரது வீட்டு வேலையாள் சாமுவேல் மிரண்டா என்பவரிடம் 287 முறை பேசி இருக்கிறார். இதன்மூலம் சுஷாந்த் நடவடிக்கைகளை அவர் கண்காணித்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் தனது தந்தையிடம் 1192 முறை, சகோதரர் சவுவிக் உடன் 1069 முறை, தனது மாஜி மேனேஜர் ஸ்ருதியிடம் 761 முறை, இயக் குனர் மகேஷ் பட்டிடம் 16 முறை பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரிடம் 23 முறையும் பேசியுள்ளார் ரியா சக்ர போர்த்தி. ஆனால் சுஷாந்த், ரியாவிடம் 28 முறை மட்டுமே போனில் பேச அழைத்திருக்கிறார். இதற்கிடையில் சுஷாந்த் சிங் தற்கொலையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் ரியாவை அழைத்து விசாரித்தனர். சுஷாந்த் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 15 கோடி யாருக்கு மாற்றம் செய்யப்பட்டது என்ற விவரம் பற்றி ரியாவிடம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்தவர் அப்போது சுஷாந்துடன் தான் பிஸ்னஸ் பார்ட்னராக இருந்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிவித்தார். அமலாக்க துறை விசாரணைக்குச் சென்ற ரியாவுடன் அவரது சகோதரர் சவுவிக் உடன் சென்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>