என்ன, நயன்தாரா அம்மாவாகிறாரா!? ரசிகர்கள் அதிர்ச்சி..

Does Nayanthara Become Keerthis Mother: Fans are shock

by Chandru, Aug 8, 2020, 11:23 AM IST

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்ற ஹீரோயின்களாக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம் போன்ற படங்களை இயக்கியவர். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் கதை ஆன்லைனில் லீக் ஆனது.

ரஜினியின் இரண்டு முறைப்பெண்களான குஷ்பு, மீனா இருவருமே ரஜினியை மணக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இருவரில் யாரையாவது ஒருவரை மணந்தால் இன்னொருவருக்கு வருத்தம் ஏற்படும் என்பதால் அவர்களைவிடுத்து வேறு ஒருவரை ரஜினி மணக்கிறார். இதையடுத்து குஷ்புவுக்கும், மீனாவுக்கும் வேறு மாப்பிள்ளைகளுடன் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் ரஜினிக்குப் பிறக்கும் பெண் குழந்தை வளர்ந்து ஆளாகிறது. அந்த குழந்தையை தன் மகனுக்குத் தான் தர வேண்டும் என்று மீண்டும் குஷ்பு, மீனா ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதைப்படி குஷ்பு, மீனாவுக்குப் பதிலாக நயன்தாராவை ரஜினி மணக்கிறார். அவர்களுக்கு மகளாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் விஷயம் கீர்த்தி சுரேஷுக்கு நயன்தாரா அம்மாவாக நடிக்கிறார் என்பது தான். ஏற்கனவே நயன்தாரா அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் அவரது குழந்தைக்கு ஐந்து வயது தான் ஆகும் அதற்கு மேல் ஆகாது. ஆனால் இம்முறை பெண்குயின் படத்தில் அம்மா வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நயன்தாரா நடிக்கிறார் என்பது தான் அதிர்ச்சிக்கு காரணம். இந்த கதையெல்லாம் உறுதி செய்யாத தகவலாக நெட்டில் பரவி வருகிறது. இதையெல்லாம் பார்த்து இயக்குனர் சிவா ஸ்கிரிப்ட்டை மாற்றவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading என்ன, நயன்தாரா அம்மாவாகிறாரா!? ரசிகர்கள் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை