8 படங்களிலிருந்து தூக்கி வீசப்பட்ட அஜீத் நடிகை தேசிய விருது பெற்றார்.. சிகரெட் பிடித்த காட்சியில் நடித்த அனுபவம் எப்படி?

by Chandru, Aug 9, 2020, 10:25 AM IST

தமிழில் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பிரபலமானதுடன் தேசிய விருதும் பெற்றார். ஆனால் அதற்கு முன் ராசியில்லாத நடிகை என்று 8 படங்களிலிருந்து தூக்கி வீசப்பட்டார் வித்யா. தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்தார்.

இதுபற்றி வித்யா பாலன் கூறியதாவது:நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை செம்பூர் பகுதியில் தான். அங்குப் பாதுகாப்பான வாழ்க்கையாக இருந்தது. என் வீட்டில் நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். என் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சுவார்கள்.எல்லோரும் நான் குண்டாக இருப்பதாகக் கிண்டல் செய்வார்கள். ஆனால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் உடல் எடை குறைக்க 10 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். இதனால் இரவில் வயிற்று வலி ஏற்படும். என்னை மருத்துவரிடம் காட்டினார்கள். அவரிடம் உடல் எடை குறைப்பதற்காக 10 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன் என்றேன். உடனே அவர் கண்டித்தார். முட்டாள்தனமான இப்படியொரு ஐடியாவை கொடுத்த யார் ? அதிக தண்ணீர் குடிப்பதால் எடை மட்டுமல்ல உடலில் இருக்கும் சத்தும் வீணாகி விடும் என்று அட்வைஸ் செய்தார்.

நான் இதய சிகிச்சை அளிக்கும் டாக்டராக ஆசைப்பட்டேன் எட்டு வயதாக இருக்கும் போது.எனது தந்தை மாரடைப்பால் அவதிப்பட்டார். அதைப்பார்த்து அந்த எண்ணம் தோன்றியது. பின்னர் அவர் குணம் அடைந்துவிட்டார். மாதுரி தீட் சித் ஆடிய ஏக் தோ தீன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜுனியர் மாதுரி ஆக விரும்பினேன். அவரைப்போலவே கண்ணாடி முன் நின்று ஆடிப் பார்ப்பேன். ஷப்னா ஆஷ்மி, லட்சுமி ஆகியோர் படங்களை பார்த்து நடிக்க கற்றேன்.நான் விளம்பர படங்களில் நடித்தேன். பிறகு மலையாளத்தில் மோகன்லால் படத்தில் நடித்தேன். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததுமே மேலும் 8 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததுமே அப்படம் கைவிடப்பட்டது.இதையடுத்து என் மீது ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி 8 படங்களிருந்தும் என்னை நீக்கினார்கள். தமிழில் பெரிய படமொன்றில் நடித்து வந்தேன். அந்த படத்திலிருந்தும் நீக்கினார்கள் அதற்குக் காரணமே தெரியவில்லை. இதனால் எனக்குக் கோபம் வந்தது. அதை என் அம்மாவிடம் தான் காட்டினேன். வீட்டில் சென்று படுக்கையில் படுத்து அழுவேன்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாக உருவான டர்டி பிச்சர் படம் செய்தபோது எனது பெற்றோர் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் இயக்குனர் ஏக்தா கபூர் ஒரு பெண். அவர் அசிங்கமாக படப்பிடிப்பு நடத்த மாட்டார் என்று நம்பிக்கை இருந்தது.. அதனால் தைரியமாக நடித்தேன். இந்த பாத்திரத்துக்காக நான் சிகரெட் பிடிக்க வேண்டி இருந்தது. சிகரெட் பிடிக்க எனக்குத் தெரியாது முதன் முறை புகைத்தபோது இருமல் வந்து அவதிப்பட்டேன். இந்த படத்துக்காகத் தேசிய விருது கிடைத்தது. இதுபோன்று கமர்ஷியல் படத்துக்கு அதுவரை தேசிய விருது கிடைத்ததில்லை என்பதால் அது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் விருதாகும்.

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை