மனைவி, குழந்தைகள் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நிலையில் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..

by Chandru, Aug 9, 2020, 10:40 AM IST

பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வீட்டிலிருந்த போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. ஆனாலும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருகிறார்.

இதுபற்றி சஞ்சய் தத் வெளியிட்டுள்ள மெஜேசில்,எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவல். நான் நலமாக இருக்கிறேன். தற்போது மருத்துவமனை கண்காணிப்பில் இருக்கிறேன். கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது தெரிந்தது. டாக்டர்கள், நர்ஸ்கள் உதவியுடன் சிகிச்சை நடக்கிறது. ஒன்றிரண்டு நாளில் வீடு திரும்புவேன். நான் குணம் அடைய வாழ்த்தியவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.

சஞ்சய் தத் தற்போது வீட்டில் தனிமையில் இருக்கிறார். அவரது மனைவி, 2 குழந்தைகள் கொரோனா ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல் வெளிநாட்டில் சிக்கி இருக்கின்றனர். அங்கிருந்து வர முடியாமல் உள்ளனர். சஞ்சய் தத் கடைசியாக பானிபட் என்ற படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடிப்பில் சதக் 2 வரவுள்ளது. இப்படத்தை மகேஷ் பட் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 28ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் ரீலீஸ் ஆக உள்ளது. இதில் பூஜா பட், அலியா பட் ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை