கொரோனா லாக்டவுனில் காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர்.. நட்சத்திரங்கள் சூழ திருமணம்..

by Chandru, Aug 9, 2020, 12:30 PM IST

பாகுபலி நடிகர் ராணா, மிஹீகா காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து கொரோனா ஊரடங்கில் அதற்கேற்ப கட்டுப்பாடுகளுடன் திருமணம் ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் நடந்தது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையுடன் இது ஒரு நெருக்கமான திருமண விழாவாக இருந்தது.மணமகன் ராணா ஷெர்வானி அணிந்திருந்தார். மணமகள் ​​மிஹீகா தங்க மற்றும் கிரீம் நிறம் கலந்த லெஹங்காவில் சிவப்பு முக்காடுடன் அழகாக இருந்தார். சுற்றமும் நட்பும் சூழ இவர்கள் திருமணம் நடந்தது. மிஹீகா கழுத்தில் ராணா தாலி கட்டினார்.

நெருங்கிய நண்பரும் நடிகருமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா, நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரும் புது மண ஜோடியை வாழ்த்தினார்கள்.ராணாவின் மாமா வெங்கடேஷ், மைத்துனர் நாக சைதன்யா, மற்றும் சமந்தா ஆகியோர் திருமண கொண்டாட்டங்களில் பங்கேற்று மகிழ்ச்சியைப் படர விட்டனர். விருந்தினர் பட்டியல் சிறியதாக இருந்தது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கோவிட் 19 வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டன.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை