நடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..

Maharashtra Government Filed Case Against CBI in Supreme Court

by Chandru, Aug 9, 2020, 13:21 PM IST

சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாகப் பீகார் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ரியா சக்ரவர்த்தி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை எதிர்த்து பாந்த்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பூஷண் பெல்னேக்கர் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்நிலையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கக்கூடாது. மேலும் விசாரணைக்கு ஒரு குழுவையும் அமைத்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் இறுதி முடிவுக்கு சிபிஐ காத்திருந்திருக்க வேண்டும் .

ஜூன் 14 மதியம் 2 மணியளவில் வந்த ஒரு அழைப்பை ஏறு சம்பவ இடத்துக்குச் சென்ற போது இறந்தவரின் (சுஷாந்த்) உடல் படுக்கையில் கிடந்தது, மேலும் 5 பேர் அந்த இல்லத்தில் இருந்தனர். அதன்படி, அவர்கள் விபத்து மரண அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கப்பட்டது. மரணம் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது என்றும் வாக்குமூலம் கூறுகிறது.குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்றும் எந்தவொரு நபருக்கும் எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை என்றும் பிரமாண பத்திரம் கூறுகிறது.

பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தின் எல்லைக்குள் இந்த குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதால் பீகார் காவல்துறைக்கு இது குறித்து விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை, மற்ற மாநில காவல்துறை அதிகாரிகளால் மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த இது அனுமதிக்கப்பட்டால், அது தவறான முன்னுதாரணத்தை அமைக்கும். இது பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும், மேலும் மக்கள் விரும்பும் மாநிலங்களில் வழக்குகளைப் பதிவு செய்யத் தொடங்குவார்கள்
இவ்வாறு பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

You'r reading நடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை