நீங்கள் இல்லாமல் நான் இல்லை, சூப்பர் ஸ்டாரின் பரபரப்பு ஹேஷ் டேக்.. 45 வருடமாக திரையுலகை ஆளும் ரஜினிக்கு குவியும் வாழ்த்து..

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டில் டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'அபூர்வ ராகங்கள்' மூலம் திரைக்கு அறிமுகமானார். இரும்பு கதவுகளைத் திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார். சினிமா என்ற இரும்பு கதவுகளை அவர் திறந்துக்கொண்டு வந்து இன்று சாதனை நாயகனாக திகழ்வதைக் குறிக்கும் வகையில் அந்த காட்சி இருப்பதாக விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர். அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் 1975 ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வந்தது.

தமிழ் திரையுலகை கிட்டதட்ட அரை நூற்றாண்டுகளை நெருங்கி ஆண்டுக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சினிமாவில் 45 ஆண்டுகள் ரஜினிக்கு நிறைவடைகிறது. இது தொடர்பாக, ரசிகர்களும் பிரபலங்களும் அந்த நாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, தொடக்கமாக, பல பிரபலங்கள் இன்று பொதுவான டி.பியை வெளியிட்டுள்ளனர்.நடிகரின் திரைப்பட பயணத்தின் 45 ஆண்டுகளைக் குறிக்கும் சிறப்பு ஹேஷ்டேக் #45YearsOfRajinismCDP உள்ளது. அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அட்லீ, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராகவா லாரன்ஸ், மோகன்லால், சுனில் ஷெட்டி மற்றும் பலர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது சிவா இயக்கும் 'அண்ணாத்த' படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளார். இதில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் பட்டசத்தில் விரைந்து படப்பிடிப்பை முடித்துப் பொங்கல் தினத்தில் படத்தை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் தனது 45ஆண்டு திரையுலக பயணத்தைக் கொண்டாடும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது:என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில் என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி என்று கூறியிருப்பதுடன்
நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ் டேக்கும் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>