அவதூறாக பேசி மெசேஜ் வெளியிட்ட நடிகை மீது விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் .. சூர்யா ரசிகர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு..

by Chandru, Aug 10, 2020, 15:00 PM IST

கமல்ஹாசனின் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார் மீரா மிதுன். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்திருக்கிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர் சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி விமர்சித்திருந்தார். இதையடுத்து மீரா மிதுனை விஜய், சூர்யா ரசிகர்கள் சரமாரியாகத் திட்டி தீர்த்தனர். இதையடுத்து மீரா வெளியிட்ட மெசேஜில், என்னை விஜய், சூர்யா ரசிகர்கள் மிரட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் இருவரும் தான் காரணம் என தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதுக்கோட்டைப் போலீசில் புகார் அளித்தனர். அதில், எங்கள் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் விஜய். அவரைப் பற்றி அவதூறாக மீரா மிதுன் பேசி உள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். அதேபோல் மீரா மிதுன் மீது சூர்யா ரசிகர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே மீரா மிதுன் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தனது ஸ்டைலை காப்பி அடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை