கொரோனாவில் குணம் அடைந்த ஐஸ்வர்யாராய் மகள் ஆன்லைன் வகுப்பு..

by Chandru, Aug 11, 2020, 11:49 AM IST

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன.கொரோனா தொற்றிலிருந்து குணமான ஆராத்யாவுக்கும் வகுப்புகள் தொடங்கின. கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் அதற்காக பயப்படாமல் மருத்துவமனையில் தனிமையில் தங்கி சிகிச்சை பெற்றார் ஆராத்யா. வீடு திரும்பிய பிறகு சோர்வில்லாமல் தன்னை பராமரித்துக்கொள்கிறார்.

இணையம் வகுப்பு தொடங்கிய பட்சத்தில் அவர் அதில் கவனம் செலுத்திப் படிக்க முடியுமா என்று அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.அதுபற்றி ஆராத்யாவிடம் கேட்டபோது நான் கண்டிப்பாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பேன் என்று ஆர்வமுடன் கூறினார். இதையடுத்து ஆன்லைன் வகுப்பில் அவர் பங்கேற்று பாடம் பயின்று வருகிறார்.ஆன்லைனில் ஆராத்யா பாடம் பயிலும் வீடியோ இணையத் தளத்தில் வைரலாகி வருகிறது. அவருக்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆராத்யாவின் இந்த ஊக்கம் மற்ற குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படிக்க ஊக்கம் அளிப்பதாகப் பலர் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை