அஜீத், ஷாலினி காதலுக்கு பயன்படுத்திய கோட் வேர்ட் லீக்.. ரகசியத்தை உடைத்த நடிகர்..

Advertisement

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜீத் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். நடிகர்களில் இவர் தனக்கென தனி பாணி கடைப்பிடிக்கிறார். தலையில் ஒரு முடி நரைத்தாலும் உடனே கறுப்பு டை அடிக்க பரபரக்கும் நபர்களுக்கு மத்தியில் 80 சதவீதம் முடி நரைத்த நிலையில் அதற்குக் கறுப்பு டை அடிக்காமல் அதே தோற்றத்துடன் இளம் நடிகைகளுடன் நடித்துப் படத்தை சூப்பர் ஹிட்டாக்குகிறார். இந்த நேர்மையை அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
வாலிப வயதில் காதல் வலையில் விழுந்தார் அஜீத். நடிகர் ஷாலினியுடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அஜீத்தின் நேர்மையான பேச்சும் செயலும் திருமணம் ஆன பிறகு குடும்பத்தின் மீது எவ்வளவு அன்போடு இருப்பார் என்ற உறுதியும் ஷாலினியை வெகுவாக கவர்ந்தது.

அஜீத், ஷாலினி நேரில் சந்திக்க முடியாத நிலையில் போனில் காதலை வளர்ந்தனர். அப்போது அவர்களுக்குள் ஒரு ரகசிய குறியீடு வைத்துக்கொண்டனர். அவர்களின் ரகசிய குறியீடு என்ன என்பதை அஜீத், ஷாலினி திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆன பிறகு தற்போது லீக் ஆகி இருக்கிறது. இதை அஜீத், ஷாலினி இருவரின் நட்பு நடிகர் வெளியிட்டிருக்கிறார். மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் தனது ரசிகர்கள் வலைத் தள பக்கத்தில் கோர் வேர்டை பகிர்ந்திருக்கிறார். குஞ்சக்கோ போபனுடன் நிறம் என்ற படத்தில் ஷாலினி நடித்தார்.

அப்போது ஷாலினியுடன் போனில் பேச அஜீத் நினைக்கும்போது நேரடியாக ஷாலினியுடன் பேசாமல் போபனுக்குபோன் செய்வார். அவர்தான் ஷாலினியிடம் போனை கொடுத்துப் பேச வைப்பார். அப்போது அஜீத், ஷாலினிக்கான ரகசிய வார்த்தைகளாக ஏ கே 47 (அஜீத்), சோனு (ஷாலினி) என்று பயன்படுத்திக் கொண்டார்களாம்.காதல் கோட்டை பாணியில் அஜீத் ஷாலினியிடம் போனில் பேசி காதலை வளர்த்த ரகசியமும் இதன்மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அஜீத், ஷாலினி காதல் சீக்ரெட் வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது.அஜீத் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>