சினிமாவில் பல இளம் ஜோடிகள் டேட்டிங் செய்கின்றனர். அது சில சமயம் காதலாகவும், பல சமயம் பிரேக் அப்பிலும் முடிகிறது. ஆனால் ஒரு நடிகை குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இவரைத்தான் மணக்கப் போகிறேன் அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்னைப்பற்றி அவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டுக் கடந்த 2 மாதமாக டேட்டிங் செய்து வருகிறார்.
வெற்றிவேல், ரம், எமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதுடன் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் மியா ஜார்ஜ். இவர் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்புடன் கொரோனா ஊரடங்கில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மணமகனின் இல்லத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் நிச்சயதார்த்த விழா நடந்தது. வரும் செப்டம்பர் மாதம் தங்கள் திருமணத்திற்கு இந்த ஜோடி தயாராகி வருகிறது.
அதற்கு முன்பாக அஸ்வினுடன் டேட்டிக் செய்வது பற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது
திருமணத்திற்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் கூட நட்பு தான் எல்லா உறவுக்கும் அடித்தளமாக அமைகிறது. எனது திருமணம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தது. எனவே எங்கள் இருவருக்குள் (மியா-அஸ்வின்) நட்பும் பழக்கமும் உருவாக வேண்டும் என்பதற்காக நேரம் ஒதுக்கிப் பேசிப் பழகினோம்,இது எங்கள் இருவருக்கும் இடையேயான பிணைப்புக்கும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும் அதிக நேரம் இருக்கிறது. இது ஒரு வழக்கான, அதிக வேலை உள்ள சூழ்நிலையாக இருந்திருந்தால், தொலைப்பேசியில் ஹலோ என்று சொல்லி அத்துடன் சில நிமிட பேச்சோடு முடிந்திருக்கும்.
ஆனால் லாக்டவுன் நேரத்தில் வேலை எதுவும் இல்லை. எல்லாம் முடங்கிக் கிடக்கிறது . அதனால் கையில் நிறைய நேரத்துடன் வீட்டில் இருக்கிறேன். அதனால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்.அஸ்வின் நேர்மையானவர், உண்மையானவர், அக்கறையுள்ளவர் மற்றும் முற்போக்கான எண்ணங்கள் கொண்ட மனிதர். எதையும் அவர் வெளிப்படையாக பேசுகிறார். அவர் என்னுடன் மிகவும் உண்மையானவராக இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இவ்வாறு மியா ஜார்ஜ் கூறினார்.