சினிமா நட்சத்திரங்களின் பிரியாவிடையில் நனைந்த தோனி.. மோகன்லால், சிவகார்த்திகேயன், வரலட்சுமி பாராட்டு மழை..

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் எம் எஸ். தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள். கட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுவதிலிருந்து அவர் விலகி இருந்தார். சர்வதேச போட்டிகளிலிருந்து விலகுவதாக தனது இணையதள பக்கத்தில் தோனி அறிவித்தவுடன் ரசிகர்கள் பரபரப்படைந்தனர். அவர்கள் கண்ணீர் மெசேஜ்கள் பகிர்ந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல சினிமா நட்சத்திரங்களும் தங்களது ஷாக்கை வெளிப்படுத்தினர்.

அதன் விவரம் வருமாறு:நடிகர் மோகன்லால்:தோனி, மற்றும் ரைனாவுக்கு பிரியா விடை.

சிவகார்த்திகேயன்:எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தி மகிழ்வித்ததற்கு உங்களுக்குப் பெரிய நன்றி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான தலைவர்.

நடிகர் வரலட்சுமி: தோனி போன்ற ஒரு மனிதன் பற்றி என்ன சொல்ல முடியும். அவருக்கு நாம் எல்லோரும் நன்றி சொல்லமுடியும் உங்களது கிரிக்கெட் விளையாட்டு மூலம் உற்சாகப்படுத்திய உங்களுக்கு எங்களின் நன்றி.

சேகர் கபூர்: ஒருமுறை, ஒருபோதும், நம் இதயங்கள் துடிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள முடியுமா? தோனி வெளியே வந்தபோது எங்கள் உற்சாகத்தின் அளவு உயர்வதில்லை.

ஹரிஷ்கல்யாண்: எல்லா நினைவுகளுக்கும் போதுமான நன்றி சொல்ல முடியாது! கேப்டன் என்றென்றும் கூல்.

விஷ்ணு விஷால்: ஆச்சரியமான ஆரம்பம்.. அற்புதமான பயணம்.. அட்டகாசமான விளையாட்டு அணுகுமுறை.. அற்புதமான தலைவர் ... அற்புதமான நினைவுகள்.. அற்புதமான ஓய்வு.

சாந்தனு: நீங்கள் எங்களுக்குச் சிறந்த நினைவுகளை வழங்கியுள்ளீர்கள் இந்திய கிரிக்கெட் நீங்கள் இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நீங்கள் உலகக் கோப்பையைத் திரும்பக் கொண்டு வந்தீர்கள்.

விக்ரம் பிரபு: சின்ன தல! உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், கடந்த சில ஆண்டுகளாக உங்களை ஒரு மனிதராக நான் அறிந்து கொண்டேன். நீங்கள் கிரிக்கெட் ஆடினாலும் ஆடாமல் இருந்தாலும் மின்னும் மாணிக்கம். மிகவும் முழுமையான கிரிக்கெட் வீரர்! ஒரு சவாலை எடுத்துக் கொண்டு, திட்டமிட்டதைச் சரியாகச் செய்தார். தோனி உங்கள் சாதனைகளுக்கு நன்றி.

இவ்வாறு நட்சத்திரங்கள் தோனிக்கு தரும் பிரியாவிடை அவரது கழுத்தில் பாராட்டு மாலையாகக் குவிந்துக் கொண்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>