நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் இப்படம் மூலம் மீண்டும் விஜய்சேதுபதி இணைகிறார். ஏற்கனவே புறம்போகு எனும் பொதுவுடமை படத்தில் இவரது இயக்கத்தில் நடித்தார். இப்படம் 2015ம் ஆண்டு திரைக்கு வந்தது. லாபம் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
சமூக சேவகன் என்ற கதாபாத்திரம் செய்யும் ஆக்ஷனுடன் கூடிய கமர்ஷியல் கதை அம்சம்கொண்ட இப்படம், விவசாயிகள் பிரச்னையையும் மையமாக வைத்து உணர்ச்சி பூர்வமான ஸ்கிரிப்ட்டாக ஜனநாதன் அமைத்திருக் கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“விலை லாபத்துக்கு இல்லை...அசலுக்கு” - விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் டிரெய்லர்...!
Advertisement