ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர். பயணத்தின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அணியின் உதவியாளர் ஜார்ஜ் என்பவர் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ``கிரிக்கெட்டில் எல்லா சாதனையும் படைத்த ஒருவர் என்னிடம் வந்துஉங்கள் கால்கள் மிகவும் நீளமாக இருக்கிறது. நீங்கள் என்னுடைய பிசினஸ் கிளாஸ் இருக்கையில் உட்காருங்கள், நான் எகானமி கிளாஸில் உட்கார்ந்து கொள்கிறேன் என்று கூறினார். கேப்டன் என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்துவார்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
When a man whos seen it all, done it all in Cricket tells you, “Your legs are too long, sit in my seat (Business Class), Ill sit in Economy.” The skipper never fails to amaze me. @msdhoni pic.twitter.com/bE3W99I4P6
— george (@georgejohn1973) August 21, 2020
தோனி தான் அணி உதவியாளருக்காக தனது பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்து, எகனாமிக் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஜார்ஜின் இந்தப் பதிவை பார்த்தவர்கள் தோனியை பாராட்டி தள்ளி வருகின்றனர். இவரின் டுவீட் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது. இதற்கிடையே, துபாய் சென்று இறங்கியுள்ள சென்னை அணிக்கு முதல்கட்டமாக கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது. மேலும் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது என்றும், வீரர்கள் தங்களுக்கான உரையாடலை பால்கனியில் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுளாக கூறப்படுகிறது.