தந்தையின் சித்ரவதை , அடிதாங்க முடியாமல் நடிகை கதறல்.. தினமும் டார்சர் என்னையும் அம்மாவையும் காப்பாற்றுங்கள்..

கொரோனா ஊரடங்கள் வருமானம் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் முடங்கி இருக்கின்றனர். சினிமா துறையில் இந்த அவலம் வெளிப்படையாகவே தெரிகிறது. சில நடிகர்கள் வருமான இழப்பால் தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. பொன்னம்பலம், சூரியகாந்த் போன்ற வில்லன் நடிகர்கள் சிகிச்சைக்கும் உணவுக்கும் உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் சினிமா மற்றும் டிவி நடிகை ஒருவருக்கு வேறு வகையான டார்ச்சர் ஆக மாறி இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்பும், டிவி வருமானமும் இல்லாததால் வீட்டில் முடங்கி உள்ளார்.

தெலுங்கில் ஓய் இடியட் படத்தில் நடித்தவர் திருப்தி ஷன்க்தர். பிறகு பல்வேறு இந்தி டிவி சீரியல்களில் நடித்துள்ளார், இவரது தந்தை ராம் ரதன் ஷன்க்தர். மகள் திருப்தியை சினிமாவில் நடிக்க வற்புறுத்திச் சேர்த்துவிட்டார். அதற்காக லட்சங்களில் செலவு செய்திருக்கிறார். ஆனால் திருப்தியால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. தற்போது தனக்கு தெரிந்த ஒரு பையனுக்குத் திருப்தியை திருமணம் செய்துதர மகளைக் கட்டாயப்படுத்துகிறார். அதற்கு மறுத்த மகளை அடித்துத் துன்புறுத்தி டார்ச்சர் செய்து வருகிறார். ஆனால் திருப்தி ஒப்புக்கொள்ளவில்லை.

மகளுக்கு ஆதரவாக பேசிய அம்மாவையும் திருப்தியின் தந்தை அடித்துத் துன்புறுத்துவதுடன் மகளை நடிகையாக்கச் செலவு செய்த பணத்தைத் திரும்பத் தரும்படி வற்புறுத்துகிறார். இருவரையும் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதால் போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை. இதையடுத்து நடிகை திருப்தி கதறல் வீடியோ வெளியிட்டு உதவி கேட்டிருக்கிறார். அம்மாவையும் தன்னையும் காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.இந்த தகவல் போலீசுக்குத் தெரிய வந்ததையடுத்து திருப்தி தந்தையைப் பிடித்து பரேலி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

READ MORE ABOUT :