இதயம் முரளி மகனுடன் பெண் இயக்குனர் திருமணம்..

Advertisement

இதயம் பட நடிகர் முரளி. பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தார். மறைந்த முரளியின் மகன்கள் அதர்வா, ஆகாஷ். ஆகாஷ் வெளிநாட்டில் படித்தபோது நடிகர் விஜய்யின் உறவுக்கார பெண்ணும். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவருமான சினேகாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரிட்டோவின் தந்தை விஜய் நடித்த பல படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இவர்தான் தயாரித்திருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கில் ஆகாஷ். சினேகா திருமணம் சத்தமில்லாமல் நடந்தது.முன்னதாக இவர்கள் திருமணம் சாந்தோம் சர்ச்சில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரங்கில் நடந்தது. கொரோனா வழிகாட்டு முறைகளுடன் திருமணம் நடத்தப்பட்டது குறைந்த அளவிலான உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த திருமணம் பற்றி தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, நடிகர் அதர்வா கூறியதாவது:மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்ல திருமண நிகழ்வு அனைவர் ஆசீர்வாதத்தில் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது.

இந்நிகழ்வை இன்னும் பிரமாண்டமாகக் காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம். தற்போதைய உலக சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழாவைத் திட்டமிட்டுள்ளோம்.திருமணப் பந்தத்தில் இணைந்து பயணிக்கும் எங்கள் இல்ல வாரிசுகளை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் என்று கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>