5 கிலோ அரிசி, இரத்த தானம் ...பல நல்ல காரியங்களை செய்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல காமெடி நடிகர்...!

Comedy Actor Soori BirthDay Fans Blood Donation and Corona Help to Employees

by Chandru, Aug 27, 2020, 21:27 PM IST

பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது தலைவனின் பிறந்த நாளில் நற்பணிகளில் இறங்கி விடுகின்றனர். மரம் நடுவது, ரத்தானம் செய்வது என ரசிகர்கள் நற்பணி செய்கின்றனர். ஹீரோக்கள் பாணியை காமெடி நடிகரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி அதகளம் செய்திருக்கின்றனர்.

நடிகர் சூரிக்கு இன்று 27 ஆகஸ்ட்டில் பிறந்த நாள் அதை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் தலைமையிலும், திருநெல்வேலியில் உதயகுமார் தலைமையிலும், நாகர்கோவிலில் சதீஷ்ராஜா தலைமையிலும் சென்னையில் சூரி நற்பணி இயக்கத்தின் சார்பாக ஆதீஸ்வரன் தலைமையிலும் இன்று கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌர விக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மதிய உணவு வழங்கினர்.


நாகர்கோவிலில் சதீஷ்ராஜா தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர். பின்னர் பாண்டிச்சேரியில் முதியோர் இல்லத்தில் மதிய உணவும் வழங்கினார்.தருமபுரி, கரூர் மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் மூலம் இரத்த தானம் வழங்கினர்.


கடலூர்,தருமபுரி மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் நற்பணி இயக்கம் சார்பாக ஆதரவற்றோருக்கு இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டன. மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் நற்பணி இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்டன. நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணனுக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 5 கிலோ அரிசி, இரத்த தானம் ...பல நல்ல காரியங்களை செய்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல காமெடி நடிகர்...! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை