சர்வாதிகார போக்கோடு செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் - கமல்ஹாசன் அறிக்கை

Advertisement

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:


கடந்த 25ம்‌ தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்‌ முழுவதும்‌ 2மணி நேரம்‌ மட்டும்‌ டாஸ்மாக்‌ மதுபான கடைகளை அடைத்து அதன்‌ ஊழியர்கள்‌ அறவழியில்‌ போராடியதற்காக சுமார்‌ 450 ஊழியர்களை பணியிட மாற்றம்‌ செய்து சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டிருக்கும்‌ தமிழக அரசின்‌ தொழிலாளர்‌ விரோத போக்கிற்கு மக்கள்‌ நீதி மய்யம்‌ தொழிலாளர்கள்‌ அணி சார்பில்‌ கடும்‌ கண்டனத்தை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.


மேலும்‌ அரசு, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ நடைமுறையில்‌ உள்ள சத்துணவு திட்டத்தில்‌ பயன்பெறும்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 10ம்‌ வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தற்போதைய ஊரடங்கு காலகட்டத்திலும்‌ சத்தான உணவு சென்றடைய வேண்டும்‌ என்கிற நோக்கத் தில்‌ அதனை உலர்‌ பொருட்களாக வழங்கப்பட்டு வருவதால்‌ அதில்‌ பல்வேறு முறைகேடுகள்‌ நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும்‌ முறைகேடுகளை தடுத்து மாணவ, மாணவியருக்கு சத்தானது சென்று சேர மாணவச்‌ செல்வங்களின்‌ நலன்‌ சார்ந்து கோரிக்கைகளை முன்வைத்து விடுமுறை தினத்தில்‌ முறையான சமூக இடை வெளியை கடை பிடித்தும்‌, முகக்கவசங்கள்‌ அணிந்தும்‌ அறவழியில்‌ போராடிய சத்துணவு ஊழியர்களின்‌ அன்றைய ஒரு நாள்‌ ஊதியத்தை பிடித்தம்‌ செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.


சத்துணவு ஊழியர்கள்‌, டாஸ்மாக்‌ பணியாளர்கள்‌ உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர் கள்‌ தங்களின்‌ நியாயமான கோரிக்கைகளுக்காக காந்தி கண்ட அறவழியில்‌ போராடுவதை முடக்கி இந்த கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ கூட தொழிலாளர்‌ விரோத போக்கினை கடைபிடித்து வரும்‌ தமிழக அரசு இனியாவது தனது செயல்பாடுகளை மாற்றிக்‌ கொள்ள வேண்டும்‌.


மேலும்‌ சத்துணவு ஊழியர்கள்‌ மற்றும்‌ டாஸ்மாக்‌ ஊழியர்கள்‌ சங்க பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின்‌ நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. தமிழக அரசு தொடர்ந்து தொழிலாளர்களின்‌ குரல்வளையை நெறிக்கின்ற செயலில்‌ ஈடுபட்டு வாழ்வாதாரத்தை பறித்து வருமானால்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ தொழிலாளர்கள்‌ அணி சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>