கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் கட்டுப்படுத்திய நிலையில் மற்ற நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமானாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு உள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்கள்.
ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைக் கமுக்கமாக மூடி மறைத்துவிட்டு குணம் ஆன பிறகு வாய் திறக்கிறார்கள். ஐஸ்வர்யாராய்க்குக் கூட முதலில் கொரோனா தொற்று இல்லை என்று தான் மறைக்கப்பட்டது. பின்னர் ஒரு அமைச்சர் ஐஸ்வர்யாவுக்குத் தொற்று இருப்பதை வெளியிட்டார். அதன் பிறகே அவர் அதை ஒப்புக் கொண்டார். அதேபோல் நடிகர் விஷால் கொரோனா பாதிப்புக்குள்ளானார். அவரது தந்தை மற்றும் மேனேஜர் பாதிக்கப்பட்டனர். நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனும் கொரோனா தொற்று பாதித்ததை வெளிப்படுத்தவில்லை. இந்த விஷயமெல்லாம் அவர்கள் சிகிச்சை பெற்று மீண்ட பிறகே வெளியானது. தற்போது மற்றொரு பிரபல நடிகை, கொரோனா தொற்றை மறைத்தது அம்பலமாகி இருக்கிறது.
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. மும்பையில் கணவருடன் வசிக்கிறார். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு தொற்று ஏற்பட்டது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று மீண்டிருக்கிறார். அதுபற்றி தற்போது தெரிவித்திருக்கிறார்.இதுபற்றி ஜெனிலியா கூறும்போது, சென்ற மூன்று வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று எனக்கு உறுதியானது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன். சென்ற 21 நாட்களாக அறிகுறி எதுவும் இல்லை. பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் எனத் தெரிந்தது. இது கடவுளின் ஆசிர்வாதம். இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்தது எனத் தெரிவித்திருக்கிறார்.