ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் கேரளாவை அழகாக்கப் போகிறது. இணைய தளம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஓணம் பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் பெண்கள் இணைந்து கேரள நடனம் ஆடி அதை வைரலாக்கினர். கோலிவுட்டில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எனப் பல மலையாள நடிகைகள் நடித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை நயன்தாரா சென்னையில் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கொரோனா ஊரடங்கில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தார்.
எப்போது லாக்டவுன் முடியும் மீண்டும் காதலி நயன்தாராவுடன் எப்போது ஊர் சுற்றுவது என்று தனது ஆதங்கத்தை சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். அவரது ஆசை வெகு சீக்கிரமாக நிறைவேறி இருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து நயன்தாராவுடன் ஓணம் பண்டிகை கொண்டாடத் தனி விமானத்தில் இருவரும் கேரளா பறந்தனர். நயன்தாரா குடும்பத்தினருடன் விக்னேஷ் சிவன் ஓணம் கொண்டாடுகிறார்.
இருவரும் கேரள பாரம்பரிய உடையில் இருக்கும் படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.நயன்தாரா அடுத்த விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.