தேர்தலுக்கு முன் அரசியல் அதிரடி படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.. அரசியலை புதிய கோணத்தில் வெளுத்து வாங்கும் இயக்குனர் யார் தெரியுமா..?

by Chandru, Sep 2, 2020, 19:06 PM IST

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை தங்களுக்குள் வாய்மொழி உடன்படிக்கை செய்துக் கொண்டு தனித்தனி படங்களில் நடித்தனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. ரஜினி ரசிகர்கள் கமல் படத்தை விமர்சிப்பதும் , கமல் ரசிகர்கள் ரஜினி படத்தை விமர்சிப்பதுமாக படங்கள் சக்கைப்போட்டு தியேட்டர்களில் போட்டி போட்டு கல்லா கட்டியது. அது இப்போது வரை தொடர்கிறது.

விஜய், அஜீத் தாண்டி சிம்பு, தனுஷ் என இளம் நடிகர்கள் வலம் வந்துக் கொண்டிருந்தாலும் ரஜினி, கமல் படத்துக்குத் தனி மவுசு இருக்கிறது. தற்போது ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. அப்படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்டது. ரஜினியை லோகேஷ் சந்தித்துக் கதை கூறினார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு எல்லா திட்டத்தையும் புரட்டிப் போட்டது. திடீரென்று படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் ரெடியாகியும் தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. ரஜினி நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தடைப்பட்டது.

கொரோனா குழப்படியால் மாஸ்டர் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. அண்ணாத்த முடிக்காமல் லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனது. தற்போது கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்கப்பட்டாலும் உடனடியாக அண்ணாத்த படப் பிடிப்பில் ரஜினி பங்கேற்பாரா என்ற சந்தேகம் உள்ளது. அப்படியே பங்கேற்றாலும் அதன் படப்பிடிப்பு ஒரு மாதமாவது நடக்கும். பிறகு டப்பிங் போன்ற பணிகள் உள்ளது. இதனால் கமல் தயாரிக்கும் ரஜினி படம் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.சட்ட சபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் இந்தியன் 2 படத்தைத் தேர்தல் படமாக வெளியிடக் கமல் எண்ணி இருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக கமல்ஹாசன் மற்றொரு அரசியல் படத்துக்குத் திட்டமிட்டிருக்கிறார். இது தற்போதைய அரசியலை வெளுத்துக் கட்டும் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
ஏற்கனவே அரசியல் கதைகளில் கமல் நடித்திருந்தாலும் அதிலிருந்து இந்த கதைக்களங்களை புதிய கோணத்தில் அமைக்கப்பட உள்ளது. லோகேஷ் கமலுக்காக உருவாக்கும் அரசியல் கதை புதிய கோணத்தில் கமலின் பாலிசியையும் சொல்லும் விதமாக ஸ்கிரிபட் அமைக்கிறாராம்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Cinema News

அதிகம் படித்தவை