தளபதி விஜய்க்காக திரைக்கதை எழுதும் வெற்றிப்படங்களின் இயக்குனர்..!

by Chandru, Sep 3, 2020, 18:53 PM IST

பாலு மகேந்திர பள்ளியில் படித்தவர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த 'பொல் லாதவன்' இயக்குனராக அறிமுக மானார், இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் வணிக ரீதியான வெற்றியை பெற்றது. கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார், அத்தனையும் தரமான அசத்தலான படங்கள்.


வெற்றிமாறன் தனது நெருங்கிய நண்பர் தனுஷ் நடித்த பொல்லதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை' மற்றும் 'அசுரன்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். நீண்ட இடவெளிக்கு பிறகே மற்ற ஹீரோக்களுடன் இணைந்து பணி யாற்றத் தொடங்கியுள்ளார்.


சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்த வெற்றிமாறன் அதற்காக தயாராகி வருகிறார். இதற் கிடையில் சூர்யா நடிக்கும் 'வாடி வாசல்' படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில்தான் தளபதி விஜய்க்கு திரைக்கதை எழுதத் தொடங்கியுள்ள தாகவும் உறுதிப்படுத்தியுள்ளார், ஸ்கிர்ப்ட்டை மாஸ் ஹீரோ விஜய்க்கு சொல்ல அவரது அழைப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கி றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி யில் ஒரு படம் செய்வார்கள் என்று ஏற்கனவே பேச்சு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜயின் 'மாஸ்டர்' மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவால் தியேட்டர் மூடலால் ரிலீஸ் தாமதமாகிறது. தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப் பட்டு இயல்பு நிலை திரும்பியதும் மாஸ்டர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை